Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 06 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகள் சீன கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்றான தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
பிலிப்பைன்ஸ், தாய்வான், மலேசியா போன்ற நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இதனால் அங்கு நீண்ட காலமாக பிராந்திய மோதல் நீடித்து வருகிறது.
அதன்படி அங்குள்ள ஷோல் பகுதியில் சில மிதக்கும் தடைகளை நிறுவி பிலிப்பைன்ஸ் படகுகளை சீனா தடை செய்தது. ஆனால் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் அந்த தடைகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் இரு விநியோக படகுகளை கடற்படையினர் சர்ச்சைக்குரிய ஷோல் பகுதிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சீன கடற்படையால் அந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கில்பர்டோ தெரிவிக்கையில், 'தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க பிலிப்பைன்ஸ் தயாராகவுள்ளது' என எச்சரித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .