Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்களின் பட்டியளில் முதல் இடத்தில் உள்ளவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவராவார்.
இந்நிலையில், எலோன் மஸ்க்கின் கல்லூரி பருவத்தில் காதலியாக இருந்தஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) தான் எலோன் மஸ்க்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.
தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வரும் ஜெனிஃபர், கல்லூரி காலத்தில் எலோன் மஸ்க்குடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை RR Auction மூலம், வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் திரட்டுவதற்காக விற்பனை செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவற்றில் எலோன் மஸ்க், கடந்த 1995 ஆம் ஆண்டு, ஜெனிஃபருக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கடிதமும், எலோன் மஸ்க் கையெழுத்திட்ட நாணயத் தாள் ஒன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜெனிஃபர், "எலோன் யாரிடமும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் எப்போதாவது அவர் மிகவும் சில்லியாக நடந்து கொண்டு, என்னை சிரிக்க வைப்பார்" என கூறி உள்ளார்.
மேலும், தங்களின் ஒரு வருட காதல் இனிமையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Jul 2025
17 Jul 2025