2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

புதிய ஜனாதிபதியாக லை சிங் டி

Mayu   / 2024 ஜனவரி 14 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனி நாடாக சீனா அங்கீகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது.

இதற்கிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அங்கு ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து சீனா ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ-ஹி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜி வேட்பாளராக களமிறங்கினார்.

இந்நிலையில், தைவான் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியானது. அவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். விரைவில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

தைவான் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சீன இராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X