Freelancer / 2025 மே 08 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) XIV செய்யப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வத்திகானில் நேற்று (07) 250 கர்தினால்கள் குவிந்த நிலையில், 80 வயதிற்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
இதற்காக சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கர்த்தினால்கள் ஒன்று கூடி இரகசிய வாக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்க முடியாததால் இன்று காலை மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
எனினும் அதன்போதும் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதை காட்டும் விதமாக புகைபோக்கியிலிருந்து கரும்புகையே வௌியானது.
இந்நிலையில் இன்று மாலை புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.
இதற்கமைய புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார். R
11 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago