2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டில் ஐ.எஸ். தாக்குதல் திட்டம் முறியடிப்பு

Freelancer   / 2026 ஜனவரி 03 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை  தெரிவித்தது.

இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பினால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
 
எமது சிறந்த பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அதன் பணிப்பாளர் காஷ் படேல்  தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .