2025 மே 14, புதன்கிழமை

பூமி - நிலவுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா L1

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

ஆதித்யா, இஸ்ரோவின் திட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு தனது பயணத்தை மேற்கொண்டு, அவ்வப்போது இஸ்ரோவிற்கு (பூமிக்கு) புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா, அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமிரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. அந்த புகைப்படங்களையும் வீடியோவாக இஸ்ரோ பகிர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .