2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பெட்ரோல் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து; 9 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட ஆரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நேற்று முன்தினம் (01) வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இதனையடுத்து குறித்த கனரக வாகனத்தில் இருந்து கசிந்த பெட்ரோலை எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்ததாகவும், இதன்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவ் வாகனம் வெடித்து சிதறியதாகவும், இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 76 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X