2025 மே 15, வியாழக்கிழமை

பெண் அதிகாரியின் குடையை பறித்த பாகிஸ்தான் பிரதமர்

Freelancer   / 2023 ஜூன் 26 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார்.

காரிலிருந்து  ஷெபாஸ் ஷெரீப் இறங்கும்போது மழை பெய்ததால் பெண் அதிகாரி ஒருவர் அவருக்கு குடை பிடித்தபடி வருகிறார். அப்போது அப்பெண் அதிகாரியிடம் இருந்து ஷெபாஸ் ஷெரீப் குடையை வாங்கிக் கொண்டு, தான் மட்டும் தனியாக செல்கிறார். 

அந்தப் பெண் அதிகாரி கொட்டும் மழையில் நனைந்தபடி பிரதமரை பின்தொடர்கிறார்.

 பாகிஸ்தானின் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்கள் பிரதமரின் இந்த முரட்டுத்தனமான நடத்தையால் கோபம் அடைந்துள்ளனர். இது அநாகரிமான செயல் என்று பிரதமரை அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .