2025 மே 15, வியாழக்கிழமை

பெண்ணை காப்பாற்ற குதித்த நபர் : 9 லட்சம் பரிசு

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் பெங் கிங்ளினின் வழக்கம் போல் உணவை டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்கின் தைரியமான செயல்கள் கியான்டாங் ஆற்றில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி 9 லட்சம் பரிசு பெற்றுள்ளார்.

உணவுக்கு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது, கியான்டாங் சாலையின் அருகே அந்தப் பெண்  ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்ததை  கவனத்தினார். பிறகு சிறிதும்  தயக்கமின்றி அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் 12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றினார்.

அவர் தண்ணீரில் குதித்த  சில நிமிடங்களில், பொலிஸார் மற்றும் லைஃப் படகுகள் வந்து வெற்றிகரமாக பெண்ணை மீட்டனர்.அதனை தொடர்ந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொலிஸ் மற்றும் அலுவலக நிர்வாகமும் இணைந்து 9 லட்சம் வழங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .