Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 09 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளையும் வெனிசுலாவையும் கடந்த வாரம் துவம்சம் செய்த பெரில் சூறாவளி புயல் மெக்சிகோவையும் உலுக்கி எடுத்து டெக்ஸாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது.
கரீபியன் நாடுகளை 5 நாட்களுக்கு முன்பு வீசிய இந்த பெரும் சூறாவளி புயல் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கு 11 பேர் உயிரிழந்த நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்த அந்த சூறாவளி புயல் மெக்சிகோவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸை நேற்று அதிகாலை பெரில் புயல் தாக்கிய நிலையில், மணிக்கு 80 மயில் வேகத்தில் புயல் காற்று வீசியதால் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்பட்ட அதேசமயம், பலநூறு மரங்கள் முறிந்து விழுந்தன. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு பலத்த காற்றும், கனமழையும் டெக்ஸாஸ் மாகாணத்தையே முடக்கி போட்டன.
மேலும், பெரில் புயல் காரணமாக டெக்ஸாஸ் மாகாணம் முழுவதும் 121 மாவட்டங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத சூறைக்காற்று வீசியதால் Texasity துறைமுகம், Call western உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டன.
அதேசமயம், மின்தடை ஏற்பட்டதால் மாகாணம் முழுவதும் 25 இலட்சம் பேர் இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். படிப்படியாக வேகம் குறைந்த இந்த சூறாவளி புயல் மடகோர்டா என்ற இடத்தில் கரையை கடந்தது.
இந்நிலையில், பெரில் புயல் கரையை கடந்தாலும், டெக்ஸாஸ் கடற்கரையோர நகரங்களில் மிக கனமழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள அதே நேரம் கடந்த வாரம் கரீபியன் நாடுகளில் வீசும் போது எண் 5 ஆக வகைப்படுத்தப்பட்ட பெரில் புயல் 1வது எண் அளவுக்கு வீரியம் குறைந்து கரையை கடந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக துவம்சம் செய்து வந்த பெரில் புயல் கரையை கடந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் மாத்திரம் 25 இலட்சம் மக்களும், புயல் பாதித்த அனைத்து இடங்களிலும் பல இலட்சம் மக்களும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.S
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025