2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பேரணிக்குள் புகுந்த கார்:50 பேர் காயம்

Freelancer   / 2025 மே 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில், கால்பந்து வெற்றி பேரணியில்  கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் காயமடைந்தனர்.

 பிரித்தானியா நாட்டில், கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (27) மாலை, வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு வீதிகளில இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். 

அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உட்பட 50 பேர் காயம் அடைந்தனர். 

 இதில், காருக்கு அடியில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சிக்கி கொண்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.  சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் 53 வயதுடைய  நபர் ஒருவரை மெர்சிசைடு பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவத்தின்போது, சிலர் கார் ஓட்டுநரை துரத்தி சென்றனர். சிலர் கார் மீது எட்டி உதைத்தனர். எனினும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி பிரதமர் கீர் ஸ்டார்மர், மேயர் ரோதரமிடம் விவரங்களை கேட்டு அறிந்துள்ளார். அந்த பகுதி புதன்கிழமை (28) காலையும் போலீசாரின் வளையத்திற்குள் தொடர்ந்து வைக்கப்பட்டது. பொலிஸாரின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரிகளும் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதன்பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X