2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பைடனுடன் உரையாடிய ஜின்பிங்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 16 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர்  நேற்றைய தினம் (15) காணொலிக் காட்சி வாயிலாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பைடன், "நமது நாடுகளுக்கு இடையே போட்டிகள் இருக்கலாம். ஆனால், இது ஒருபோதும் தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக விவாதம் நடத்திக் கொள்ளலாம்" என்றும் சீனா, தைவான் மோதல் வலுவடைந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார் .



மேலும் ரோம் நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாடு மற்றும்  கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் சீன ஜனாதிபதி கலந்து கொள்ளாதமைக்கும்  கண்டனம் தெரிவித்தார். அதேபோல், சீன ஜனாதிபதி  ஜின்பிங், "அமெரிக்கா, சீனா என இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையே இன்னும் சிறப்பான தொடர்புநிலை உருவாக வேண்டும்.

சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும்" என்றார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இவ்விரு நாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .