Freelancer / 2025 மார்ச் 18 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரகசிய சேவை பாதுகாப்பை இரத்து செய்வதாக, ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் மேலும் கூறுகையில்,
“ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக இரகசிய சேவை பாதுகாப்பு உள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர். அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது அபத்தமானது.
“இதையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன் இனி இரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல் ஆஷ்லே பைடனுக்கு பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது” என்றார்.
6 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
57 minute ago
1 hours ago