2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

போதைப் பொருள் கடத்தல்; மலேசியாவில் மூவருக்கு மரண தண்டனை

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கில் தொடர்புடைய இன்னொரு பெண்ணை பினாங்கு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

63 வயதுடைய மலேசியரான பாலகிருஷ்ணன், ஈரானியர்களான 37 வயது மொஹமட் அபாஸி யூனெஸ், 31 வயது நம்ஸிகி வாஜ் செயெத் ரெஸா ஆகிய மூவருக்கும் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு அந்த மூவரும் சுமார் 48 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், அவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X