Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 08 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தாங்க முடியாத வலியின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்க்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
2021ல் ஜூலை 4ம் திகதி போப் பிரான்சிற்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்த போப் பிரான்சிஸ் அதன்பிறகு தனது பணியை தொடங்கி செய்து வந்தார்.
அதன்பிறகும் கூட திடீரென அவருக்கு அவ்வப்போது உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. சமீபகாலமாக வயிற்றில் அடிக்கடி தாங்க முடியாத வலி ஏற்பட்டு வந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து 3 மணிநேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை பிரச்சனைகள் ஏதுமின்றி வெற்றிக்கரமாக முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025