Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 மார்ச் 05 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் (88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன்உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிமோனியா தொற்று காரணமாக நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்து வருவதாகவும் இதனையடுத்து, அவரது நுரையீரலிலிருந்து அதிகப்படியான சளி ‘ப்ரான்கோ-ஸ்கோப்பி’ சிகிச்சையில் குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கருத்துத் தெரிவித்த ஜோன் கோல்மன் என்ற மருத்துவர், "கடந்த வெள்ளிக்கிழமை நிலைவரத்தை விடவும், இப்போதைய நிலைவரம் கவலைக்கு உரியது தான். இப்போது அவருக்கு முகக் கவசத்துடன் கூடிய சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு சிலநாட்களுக்கு மட்டும்தான். அதன் பின்னர் இது தேவைப்படாது,"என்றார்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago