2025 மே 13, செவ்வாய்க்கிழமை

“போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்”

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் ​போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ​இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ​அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்கள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர் என குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது. இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே "ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தததை நெருங்கி விட்டார்கள். அதிகாரிகள் தங்களது பதிலை கத்தார் மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X