Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மே 06 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பிரபல உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மூடிஸ் நிறுவனம் இது குறித்து கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவானது ஆகும். இந்தியா பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக, போர் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.
அதேநேரத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் அது பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பாகிஸ்தான் பெரும் பின்னடைவை எதிர் கொள்ளும்.
தொடர்ச்சியான போர் பதற்ற நிலை பாகிஸ்தானின் வெளிப்புற நிதியுதவியைப் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும். அதன் அந்நியச் செலாவணி இருப்புக்களை பெருமளவில் குறைக்கக்கூடும்” என தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago