2025 மே 14, புதன்கிழமை

போர்க்களமாக மாறிய இசை நிகழ்ச்சி

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் சனிக்கிழமை (07) திடீரென்று தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.

இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தநிலையில் காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்களும், வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து 260 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிவில் கலந்து கொண்டவர்களில் பலரை   ஹமாஸ் இயக்கத்தினர்  பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .