2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய ,இராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரேன் தயாராகி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது.

10 மாதங்களை கடந்தும் இப்போரானது  முடிவில்லாமல் நீண்டு வருகின்றது.

இந்நிலையில் உக்ரேனில் ரஷ்யா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை ஒரு சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு முன்மொழிந்தது.

இதன்போது உக்ரேனில் 60,000 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனை மீண்டும் கட்டியெழுப்ப ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X