2025 மே 14, புதன்கிழமை

மகளின் பெயரை பச்சை குத்தி உலக சாதனை

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்ற 49 வயதான நபர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார். இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடிக்க மீண்டும் 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .