2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மக்களிடம் பணம் பறிக்கும் போலி இணையத்தளங்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெல்லியில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிப்பதாகப்  பிரபலமுன்னணி நிறுவனத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் டெல்லி, பீகாரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல வேறு சில நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 3 நடவடிக்கைகளில், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விநியோக உரிமை தருவதாகவும், நிதிச் சேவை வழங்குவதாகவும் கூறி அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளமை தெரிய வந்துள்ளது.  

இந்நிலையில் இது குறித்தது  மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X