2025 மே 16, வெள்ளிக்கிழமை

மசூதியை இடிப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

Freelancer   / 2023 ஜூன் 08 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மசூதி உள்ளது. இது மிகவும் பழமையானதாகும். இந்த மசூதியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் (மினார்கள்) இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சீன அரசு, கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே  மசூதியில் உள்ள குவிமாடப் பகுதிகள் மற்றும் கோபுரங்களை (மினார்கள்) இடிப்பதற்காக அங்கு புல்டோசர்கள், கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள், அங்கு மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்து பொலிஸாருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் சீனாவின் ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் மசூதி வளாகத்தில் குவிந்த முஸ்லிம்கள், பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .