Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரை நிர்வாண கோலத்தில் பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் கட்டிப்பிடித்து உல்லாசத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, அதன் உச்சியில் நிற்கின்றனர். கேத்தி கருப்பு நிற பிகினி உடையுடன் காணப்படுகிறார்.
இதுபற்றி அந்த காட்சியை கண்ட நபர் ஒருவர் நிருபரிடம் கூறும்போது, கேத்தி தன்னுடைய படகை மற்றொரு படகின் அருகே கொண்டு வந்து நிறுத்தினார். இதன்பின்னர் 2 பேரும் அவர்களுடைய வேலையை தொடங்கி விட்டனர். கேத்தி யாருடன் இருக்கிறார் என முதலில் சரியாக தெரியவில்லை. ஆனால், அந்த நபரின் கையில் இருந்த டாட்டூவை (பச்சை குத்துதல்) பார்த்த பின்னரே அவர் ஜஸ்டின் ட்ரூடோ என உடனடியாக புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் கடந்த ஜூலை முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு, மான்ட்ரீல் நகரில் இரவு விருந்து ஒன்றிலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால், அவர்களின் உறவு மேலும் வலுவடைந்தது.
நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. 7 ஆண்டுகள் அவர்கள் இருவரும் பந்தத்தில் இருந்தனர். 2016-ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு, 2020-ம் ஆண்டு டெய்சி டவ் என்ற மகள் பிறந்துள்ளார். மகளை இருவரும் சேர்ந்து வளர்ப்பது என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கணவரை விட்டு விலகியுள்ள கேத்தி, ட்ரூடோவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
15 minute ago
26 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
38 minute ago
1 hours ago