2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மருந்து பற்றாக்குறை அபாயத்தில் சிக்கும் பாகிஸ்தான்

Freelancer   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

 பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. தற்போது இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில், பாகிஸ்தான் உள்ளது.

இதையடுத்து மருந்து விநியோகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் 'அவசர' நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, “எங்கள் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .