2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மலையேற கட்டணம் நிர்ணயம்

Freelancer   / 2025 மார்ச் 18 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பியூஜி எரிமலை அமைந்துள்ளது. நாட்டின் மிக உயரமான இந்த எரிமலை மலையேற சிறந்த இடமாகவும் உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த சாகச வீரர்களும் இங்கு வந்து செல்கின்றனர். 

அந்தவகையில் கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதனால், பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக, அங்கு சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த பியூஜி மலையில் ஏறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி மலையேற்றத்தில் ஈடுபடும் சாகச வீரர்களுக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும், அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சு கொண்டு வந்துள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X