2025 நவம்பர் 05, புதன்கிழமை

மழை தொடர்பான சம்பவங்களால் 22 பேர் பலி; 12 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மழை தொடர்பான சம்பங்களால் மொத்தமாக 490 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் மழை தொடர்பான சம்பவங்களால் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் பகுதிகளில் சிறியதிலிருந்து, மத்தியதர வகையிலான மழை பெய்யுமெனவும் தனித்த பகுதிகளில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷிம்லா வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலச்சரிவுகள், திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களால் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான வீதிகள் தடைப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வீதித் தடைகளை நீக்கி, போக்குவரத்துக்கு உரியதாக மாற்றி சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X