2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மஸ்க்கின் மகனால் ட்ரம்புக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

எலான் மஸ்க் தனது 4 வயது மகனுடன் அடிக்கடி ஜனாதிபதியின் ஓவல் அலுவலகம் வருகை தருவதை பார்க்க முடிகிறது. அப்போது எலான் மஸ்க் மகன் செய்யும் சேட்டைகள் இணையத்தில் கவனம் பெறுகின்றன.

இந்த நிலையில், அண்மையில் எலான் மஸ்க் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அப்போது தனது மகனையும் எலான் மஸ்க் அழைத்து சென்றுள்ளார். எலான் மஸ்கின் மகன் மூக்கை துடைத்துவிட்டு அப்படியே மேஜை மீது கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கவனித்த ட்ரம்ப், எங்கே தர்மசங்கடத்தில் நெளிந்துள்ளார். எனினும் சிரித்து சமாளித்த ட்ரம்ப், அதற்கு மறுநாளே தனது மேஜையை மாற்றியுள்ளார். 

ட்ரம்ப் மேஜையை மாற்றியதற்கு எலான் மஸ்க் மகன் செய்த செயலே காரணம் என நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X