2025 மே 14, புதன்கிழமை

மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிக்க தடை

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லினில் கிரே ஸ்டோன்ஸ் பகுதியில் சுமார் 8 பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பாடசாலை நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.


இந்நிலையில், அங்குள்ள 8 பாடசாலைகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் ஆரம்ப பாடசாலை பருவம் முடியும் வரை கையடக்க தொலைபேசி உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பாடசாலை மற்றும் உயர்நிலை பாடசாலைக்கான வயதை அடையும் வரையில் பாடசாலை, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கையடக்க தொலைபேசி உபயோகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .