2025 நவம்பர் 05, புதன்கிழமை

மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சீனா அவதானம்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்குணவுகள் ஊடாகவே, கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் பரவுகின்றன என்ப​து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சீனாவில், மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களைத் தீவிரப்படுத்த, சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்படாத போதிலும், புதிய கொரோனா வைரஸானது, வௌவால், பாம்புகள் ஊடாகவோ அல்லது சீனர்கள் உட்கொள்ளும் ஏனைய விலங்கினங்கள் ஊடாகவோ இந்த நோய் பரவியிருப்பதாக, ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், அனைத்து வகையான விலங்கினங்களையும் சீனர்கள் உட்கொள்வதாவும் ஏனைய நாட்டவர்கள் அருவருக்கக்கூடிய உணவுகளைக்கூட சீனர்கள் உட்கொள்வதால், விலங்குப் பண்ணை வியாபாரத்துக்கு சீனாவில் நல்ல கேள்வி உள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில விலங்குணவுகளை உட்கொள்வதற்குத் தடை விதிக்க, கடந்த வாரத்தில் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களைத் தீவிரப்படுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X