Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீட்டு தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கான்பூர் மற்றும் ஃபதேபூரில் 7 பேரும், ஜான்சியில் 5 பேரும் , ஜலாவுனில் 4 பேரும், ஹமீர்பூரில் 3 பேரும், காசிப்பூரில் 2 பேரும் மற்றும் ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹத் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதற்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் இறந்தவர்களது குடும்பங்களுக்கு தலா இந்திய ரூபாய் 4 இலட்சம் இழப்பீடு வழங்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago