2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மியான்மர் நிலநடுக்கம்:30 இலட்சம் பேர் பாதிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்கதால், இதுவரை 3,354 பேர் உயிரிழந்ததுடன், 4,508 பேர் காயமடைந்து உள்ளனர். மேலும், 220 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும், பலருக்கும் புகலிடம் எதுவும் இல்லை. இதனால், அவர்கள் தூங்குவதற்கும் போதிய வசதி இல்லை. வீடுகளை இழந்து பலரும் தவித்து வருகின்றனர்.

நிவாரண பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்திற்கு 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில், ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரால் 30 இலட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்றும், ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .