Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் வழங்க நளினி கேட்டுக்கொண்டதை அடுத்து நளினிக்கு ஜூலை 25ம் திகதி முதல் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பரோல் நீட்டிப்பு செய்யுமாறு நளினி கேட்டுக்கொண்டதை அடுத்து மேலும் 3 வாரங்களுக்கு பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வேலூர் புலவர் நகரில் உள்ள திரு.வி.க தெருவில் நளினி தங்கியிருந்தார்.
மொத்தம் 7 வார கால பரோல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் நளினி மீண்டும் அடைக்கப்பட்டார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025