2025 நவம்பர் 05, புதன்கிழமை

மீண்டும் தலைதூக்கும் புதிய ’எபோலா’ வைரஸ்

Editorial   / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

50 நாள்களுக்கு பின்னர் கொங்கோ நாட்டில் ஒருவருக்கு எபோலோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி புதிய எபோலோ வைரஸ் தொற்று கிழக்கு கொங்கோவின் பெனி நகரில் 26 வயதான இளைஞருக்கு உறுதியானது. 

அதன் பின்னர் 50 நாள்களுக்கு பின்னர் மீண்டும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் எபோலா வைரஸால் கொங்கோவில் 2,200 பேர் பலியானார்கள். 

வரலாற்றின் 2ஆவது மிக மோசமான எபோலா தொற்றின் மய்யமாக இருந்த பெனிநகரில் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கொங்கோவை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X