2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முகமது குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை

Mithuna   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய உதவியாளர் முகமது குரேஷி . இவர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 30-ந் திகதி இம்ரான்கான் மற்றும் முகமது குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகமது குரேஷி தேர்தலில் நிற்க தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 8-ந் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X