Freelancer / 2025 மார்ச் 03 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் டோர்காம் எல்லையில் புதிய எல்லை நிலையம் கட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம், சமான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (3) அதிகாலை, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் டோர்காம் எல்லையில் பாகிஸ்தான் எல்லை நிலையங்கள்களை (Border Post) குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.
டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையாக வெப்பத்தில் மக்கள் எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
20 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
1 hours ago