2025 மே 14, புதன்கிழமை

முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த பெண்

Editorial   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ். 1985-இல் வெளியான "வாய்சஸ் கேரி" எனும் இசை ஆல்பத்தின் டில் டியூஸ்டே பாடல் வீடியோவை கண்டு "முல்லெட்" என அழைக்கப்படும் சிகை வடிவத்தின் மீது மானிஸ் ஆர்வம் கொண்டார். தானும் இதே போன்று சிகையை நீளமாக வளர்த்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

இதன் காரணமாக 1990 பிப்ரவரி மாதம், அவர் கடைசியாக ஒரு முறை சிகை திருத்தும் நிலையத்திற்கு சென்று இதற்கேற்றவாறு சில மாற்றங்களை செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் தனது சிகையின் அளவை வெட்டி கொள்ளவோ, திருத்தி கொள்ளவோ இல்லை. தற்போது இவரது சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம் (172.7 சென்டிமீட்டர்). உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும்விதமாக ஒரு வீடியோவை அனுப்பினார்.

 இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரபூரமாக அறிவித்தது. 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .