Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பானது கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், எந்தவித உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியீடுகளுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானியைத் தாண்டி வென்றதாக ஆப்கானிஸ்தானின் பிரதம நிறைவேற்றதிகாரி அப்துலாஹ் அப்துலாஹ் நேற்று உரிமை கோரியுள்ளார்.
அந்தவகையில், குறித்த நகர்வானது அரசியல் பதற்றங்களை ஆப்கானிஸ்தான் முழுவதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஜனாதிபதி அஷ்ரப் கானியும், அவரின் பிரதான வைரியான அப்துலாஹ் அப்துலாஹ்வும் கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிட்டு அரசமைப்பு நெருக்கடியைத் தோற்றுவித்து ஐக்கிய அமெரிக்கத் தலையீட்டை ஏற்படுத்தியதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.
ஆதாரமெதுவையும் வழங்காது குறித்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் தாங்கள் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றதாக செய்தியாளர் மாநாடொன்றில் அப்துல்லாஹ் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவால் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த அப்துல்லாஹ் அப்துல்லாஹ், இரண்டாவது சுற்றுக்குத் தேர்தல் செல்லப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago