2025 மே 02, வெள்ளிக்கிழமை

முதலைக்கு முத்தம் கொடுத்து திருமணம் செய்த மேயர்

Ilango Bharathy   / 2022 ஜூலை 05 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள  சான் பெட்ரோ ஹவுமெலுவா எனும் நகரத்தின்  மேயராக இருந்து வருபவர் ‘விக்டர் ஹ்யூகோ  சோசா‘.

அந்த நகரம் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழங்கால சடங்கின் படி, ஒரு வினோதமான சடங்கினை அங்குள்ள மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி, அப்பகுதி மேயரான விக்டர், பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார். அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் திரளாக இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அதே போல, இசை முழங்க, வண்ணமயமாக, வெகு விமரிசையாக இந்த திருமண விழாவும் நடைபெற்றது.

மேலும், இந்த திருமணத்தில் பெண் முதலைக்கு திருமண உடையான வெள்ளை நிற ஆடை ஒன்று அணிவிக்கப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு காரணங்களுக்காக முதலையின் வாய் பகுதியும் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக, முதலைக்கு முத்தம் ஒன்றையும் மேயர் விக்டர் கொடுத்தார்.

இந்நிலையில் இத் திருமணம் குறித்து விக்டர் கூறும் போது, "இயற்கையிடம் மழை, உணவு, மீன் என அனைத்தும் வேண்டி, நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்களின் நம்பிக்கை" என தெரிவித்துள்ளார்.

 இந்த சடங்கினை அப்பகுதியின் பழங்குடி மக்கள், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X