Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மார்ச் 13 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஒருவர், செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் நபராக உருவெடுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்று அறுவை சிகிச்சை "குறிப்பிடத்தக்க மருத்துவ வெற்றி" என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னால் உள்ள மருத்துவர்கள் புதன்கிழமை (12) அறிவித்துள்ளனர்.
மார்ச் மாத ஆரம்பத்தில் அவருக்கு நடைபெற்ற மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, BiVACOR சாதனத்துடன் அந்த நோயாளி 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததை அடுத்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை செயல்முறையை சிட்னியின் செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இருதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பால் ஜோன்ஸ் மேற்கொண்டுள்ளார்.
இது ஒரு மனித இதயத்திற்கு முழுமையான மாற்றாக செயல்பட முடியும், ஆரோக்கியமான இதயத்தின் இயற்கையான இரத்த ஓட்டத்தை பிரதிபலிக்க காந்த லெவிட்டேஷன் (magnetic levitation) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை தானம் செய்யப்படும் வரை நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க இந்த உள்வைப்பு ஒரு பாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதய மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லாமல் உள்வைப்பு பெறுபவர்கள் தங்கள் சாதனத்துடன் வாழ முடியும் என்பதே BiVACOR இன் நீண்டகால இலட்சியமாகும் என வைத்திய நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago