2024 மே 16, வியாழக்கிழமை

முதல் முறையாக இந்து பெண் போட்டி

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8-ந் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக, கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தைச் சேர்ந்த சவேரா பிரகாஷ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண் முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

சவேரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். தனது தந்தையை பின்பற்றி அரசியலில் நுழைய முடிவு செய்ததாகவும், தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பணியாற்றுவேன் எனவும் சவேரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற சவேரா பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனேர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .