2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முதல்முறையாக கச்சா எண்ணெய் பாரிய விலை சரிவு

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க கச்சா எண்ணெய் விலை முதல்முறையாக 0 டொலருக்கும் குறைவாகச் சரிந்துள்ளது.

அளவுக்கு அதிமாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்ளும்படி அடுத்தவர்களுக்குப் பணம் கொடுக்கும் அளவுக்கு விநியோகிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எண்ணெய் வைப்பதற்கான இடவசதியும் கணிசமாக குறைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்திற்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலையைப் பூஜ்ஜியத்திற்குக்கீழ் 37 டொலர் என்று West Texas Intermediate குறியீட்டுப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெய் சந்தையிலேயே தேங்கிவிட்டதாலும் அவற்றை வைப்பதற்கான இடவசதி குறைவாக இருப்பதாலும் எண்ணெயை அதிகமானோர் வாங்கி செல்லவில்லை.

கொரோனா கிருமித்தொற்றால், நாடுகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X