2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முன்னிலையில் டொனால்டு டிரம்ப்

Mithuna   / 2024 ஜனவரி 17 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அயோவா மாகாணத்தில் வெற்றி பெற்று வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X