2025 நவம்பர் 05, புதன்கிழமை

மும்பை எண்ணெய் கிடங்கில் தீ: ஐவர் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மும்பையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.

நவி மும்பையின் உரான் பகுதியிலுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் இன்று (03) காலை ஏழு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி தரப்பில் கருத்துத் தெரிவிக்கையில், “உரான் எண்ணெய் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் காயமடைந்த எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தீயணைப்பு சேவைகள் குழு மற்றும் நெருக்கடி மேலாண்மை குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயை அணைத்தனர். இதனால் எண்ணெய் வெளியேறும் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. எரிவாயு, ஹசிரா தொழிற்சாலைக்கு திருப்பி விடப்பட்டது. பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X