ஈராக்கில் கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு புதியதொரு வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதோடு மூக்கில் இருந்து இரத்தம் வடிவதாகவும், இந்நிலை தொடருமானால் உயிரிழப்பு ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வித உண்ணி தாக்குதலுக்குள்ளான ஆடு, மாடு போன்ற விலங்குகளோடு அதிகமாகத் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்த காய்ச்சல் எளிதில் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 33 வயதிற்கு குறைவானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இக் காய்ச்சலுக்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஈராக்கில் இவ்வாண்டில் இதுவரை, 111 பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பி
டத்தக்கது.