2025 மே 14, புதன்கிழமை

மூவரை விடுவித்தது ஹமாஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரு தரப்பிலும் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இந்த போரில் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹமாசால் பிடிக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிலையில், மேலும் 3 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X