2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மெக்சிகோவில் தீப்பற்றி எரிந்த பேருந்து: 41 பேர் பலி

Editorial   / 2025 பெப்ரவரி 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில்  லொறி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

வடக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நாடான மெக்சிகோவின், குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) டபாஸ்கோ நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் 48 பேர் பயணித்துள்ளனர்.

குறித்த பேருந்து எஸ்கார்சிகா என்ற பகுதியில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் எதிரே வந்த லொறி ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த பேருந்தின் தீயை அணித்துள்ளனர்.

ஆனாலும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். (S.R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X