2025 நவம்பர் 05, புதன்கிழமை

மெக்ஸிக்கோவில் 119 பிளாஸ்டிக் பைகளில் 29 உடல்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு மெக்ஸிக்க நகரமான குவாடலஜராவவுக்கு வெளியே கிணறொன்றின் அடியில் 119 பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறைந்தது 29 சடலங்களை மெக்ஸிக்க தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏனைய மதிப்பீடுகள் 40க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பதாகக் கூறுகின்றன.

மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவிலிருந்து 45 நிமிட வெளிப் பயணத்தில் லா பிறிமவெரா என அறியப்படுகின்ற ஒதுக்குப்புறப்பகுதியில் இம்மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பாரிய மனிதப் புதைகுழியில் எத்தனை உடல்கள் இருக்கின்றன எனக் கண்டுபிடிப்பதற்கு நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையிலேயே, 13 முழுமையானதும், 16 முழுமையற்றதுமான மொத்தமாக 29 உடல்களை தாங்கள் கொண்டிருப்பதாக குறித்த இடமுள்ள ஜலிஸ்கோ மாநிலத்தின் சட்டமா அதிபர் ஜெரார்டோ சொலிஸ் தெரிவித்துள்ளார். அண்மைய ஆண்டுகளில் ஜலிஸ்கோவானது போதைமருந்துக் கடத்தல் கும்பல்களின் போரால் வன்முறையை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில், நிபுணர்கள் சிதைவுகளைத் தொடர்ந்தும் ஆராய்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் செய்தியாளர்கள் மாநாடொன்றில் கூறியுள்ளனர்.

இதுவரையில் நான்கு பேரை அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ள நிலையில், அவர்கள் நான்கு பேரும் அவர்களது குடும்பங்களால் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்ததாக ஜலிஸ்கோவின் காணாமால் போனோர் வழக்குகளுக்கான சிறப்பு வழக்குத் தொடருநர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X