Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 16 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெட்டா நிறுவனத்தின் 5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக, அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக 'மெட்டா' இயங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகிறது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.
இவர்கள், அடுத்த மாதம் 10ஆம் திகதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
29 minute ago
34 minute ago