2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

’மேற்குலக நாடுகளுடன் ஈரான் போர்’

Freelancer   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்ற நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.
 
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் ஈரானின் நிலைத்தன்மையை சீர்குலைக்க விரும்புவதாகவும், அவற்றுடன் ஈரான் போரில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இணையதளத்தில் வெளியான நேர்காணலில், தற்போதைய சூழலானது 1980களில் ஈராக் உடன் நடைபெற்ற போரை விட மோசமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் 1980-1988 ஆம் காலப்பகுதியில் நடைபெற்ற போரை விட, தற்போதைய மேற்குலக நாடுகளுடனான மோதல்  மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது என்று அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X